புதுமண தம்பதி உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு!!

73

திருமணத்திற்கு திரண்டிருந்த மொத்த உறவினர்கள் கூட்டமும் சோகத்தில் கதறுகின்றனர்.

அத்தனை சந்தோஷமாக திருமணம் செய்து வைத்து அடுத்த நாளே புதுமண தம்பதியர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரில் புதிதாக திருமணமான ஜோடி தங்களது உறவினர்களுடன் அடுத்த நாள் காலை மணமகன் வீட்டிற்கு பெண் வீட்டில் இருந்து மறுவீடு புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது அவர்களது வாகனம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று முன் தினம் மாலை ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணம் நடந்த நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று காலை புதுமணத் தம்பதிகள் பிஜ்னூரில் உள்ள தம்பூர் பகுதியில் உள்ள மணமகன் வீட்டிற்குச் செல்ல வாகனத்தில் புறப்பட்டனர்.

அவர்களுடன் உறவினர்களும் இருந்தனர். இவர்களது வாகனம், தேசிய நெடுஞ்சாலை 74ல் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த டெம்போ மீது மோதியது.


இந்த விபத்தில் இரு வாகனங்களும் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. மணமக்கள் வாகனத்தில் 11 பேர் வரை இருந்தனர்.

அவர்களில் மணமகன், மணமகன், அவரது சகோதரர் மற்றும் அத்தை இருந்தனர். இந்த விபத்தில் மணமகன், மணமகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருள் சூழ்ந்ததால் மேகமூட்டமான வானிலை காணப்பட்டது. இதன் காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். மேலும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.