புருஷனுக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் பெண்ணுக்கு நடந்த சோகம்!!

336

கள்ளக்காதல் விவகாரத்தில் திருமணமான பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாப்பூர் டவுன் சாம்ராஜ்பேட்டில் வசித்தவர் தீபா (40). இவருக்கு திருமணமாகி கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். வீட்டின் அருகே உள்ள பேக்கரிக்கு தீபா அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது அந்த பேக்கரியில் வேலை செய்த திவாகர் (37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

திவாகர் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்ததால் தீபாவுக்கு வசதியாக போனது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தீபா திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் திவாகர் வசித்த வாடகை வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. ஆனால் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சமையல் அறையில் தீபா உடல் அழுகிய நிலையில் கிடந்தது.


அவரது கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. தீபாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு திவாகர் தலைமறைவானது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு திவாகரை தேடிவருகின்றனர். அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் கொலைக்கான காரணம் தெரியவரும்.