பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேனை சோதனையிட்ட பொலிசார்: ரகசிய அறைக்குள் கண்ட அதிரவைத்த காட்சி..!

441

பிரித்தானியாவில், பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேன் ஒன்றை சோதனையிட்ட பொலிசார், அதற்குள் ஒரு ரகசிய அறை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

Doncasterஇல் இருக்கும் அந்த பெட்ரோல் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த வேனிலுள்ள ரகசிய அறையைத் திறந்தபோது, அதனுள் பிரபல ஆடம்பர பொருட்கள் நிறுவனம் ஒன்றின் பெயர் பொறித்த 45 பாக்கெட்கள் இருந்துள்ளன. அந்த பாக்கெட்களை பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் கொக்கைன் என்ற போதைப்பொருள் இருந்துள்ளது.


அதன் மதிப்பு 5.7 மில்லியன் பவுண்டுகள் ஆகும். அந்த வேனை செலுத்தி வந்த Nabil Chaudhry (31) என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று அவருக்கு Sheffield நீதிமன்றம் ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், வேனிலுள்ள ரகசிய அறையிலிருந்து பொலிசார் போதைப்பொருளை கைப்பற்றுவதைக் காணலாம்.