பெற்றோர்களே அவதானம்.. அசுத்தமான குடிநீரால் 8 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

103

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடம்பநாடு பகுதியில் வசித்து வருபவர் மனோஜ். அவரது மகள் 8 வயது அவந்திகா. அவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைக்காக அடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிறுமியை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவந்திகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். ஷிகெல்லா நோய் பாதித்தது தான் மரணத்திற்கு காரணம் என கோட்டயம் மருத்துவமனை மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.

அசுத்தமான குடிநீர் மூலம் தான் இந்த பாக்டீரியா உடலில் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அசுத்தமான குடிநீர் மூலம் இந்த நோய் பரவியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கிணறு, குளம் , குட்டை, ஆறு, ஏரிகளில் நீரை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 8 வயது சிறுமி இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரைவிட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.