அமெரிக்காவில்..
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நோயல் ரோட்ரிக்ஸ்-அல்வாரெஸ் என்ற 6 வயது சிறுவனை அவரது தாயார் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் என்பவர் ஒரு மளிகை கடைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்ற சிறுவனை அப்படியே விட்டுவிட்டு அவரது தாயார் சென்றுவிட்டார்.
முதலில் எதுவும் தெரியாமல் சிறுவன் தவித்துள்ளான். அதன்பிறகு தான் தன்னுடைய தாய் தன்னை விற்றுவிட்டுச் சென்றிருக்கிறாராம் என்பது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் நோயல் காணாமல் போனது குறித்து போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.
ஆனால் அவர் 2022ஆம் ஆண்டில் இருந்தே மாயானார் என்று பக்கத்து வீட்டார் போலீசாரிடம் கூறினர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.
அதன்படி, நோயலின் உடலுக்குள் ஏதோ அமானுஷ்யம் இருப்பதாகவும், தனக்கு புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகள் மீது நோயல் பொசசிவ் ஆக இருப்பதாகவும்,
எங்கே அவர்களை நோயல் காயப்படுத்திவிடுவாரோ என்ற அச்சத்திலும் தாய் சிண்டி இருந்ததாக தெரிகிறது. இது குறித்து குடும்பத்தார் தரப்பில் முதலில் விசாரிக்கப்பட்டபோது, நோயல் தன்னுடைய தந்தையுடன் இருப்பார் என நம்புவதாக சிண்டி கூறியிருக்கிறார்.
அதன் பின்னர் சிண்டியின் அந்த குடும்பத்தாரிடம் விசாரித்த போதுதான், சிறுவன் நோயல் சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. சிண்டி தன்னுடைய முதல் கணவரை விட்டு பிரிந்த பிறகு அர்ஷ்தீப் சிங் என்பவரை மணந்திருக்கிறார்.
சிண்டிக்கும் அர்ஷ்தீப் சிங்குக்கும் பிறந்தவர்கள்தான் அந்த இரட்டை குழந்தைகள். அவர்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்த சிண்டி நோயலை அலட்சியப்படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் நோயல் காணவில்லை என போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் சிறுவன் நோயல் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலே காணாமல் போயிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.
முறையாக சாப்பாடு கொடுக்காததால் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருந்த நிலையிலேயே சிறுவன் அவரது இரண்டாவது கணவர் அர்ஷ்தீப்பும் கைவிட்டிருக்கிறார்கள், மேலும் நோயல் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களிலேயே டல்லாஸ் ஃபோர்ட்டில் இருந்து சிண்டியும் அர்ஷ்தீப் சிங்கும் தங்களது குழந்தைகளுடன்,
இந்தியாவுக்கு தப்பி வந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது சிறுவன் நோயலை ஆபத்தான நிலையில் கைவிட்ட குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.