பேசுவதை நிறுத்திய இன்ஸ்டா காதலன்.. மன உளைச்சலில் 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

162

திடீரென இன்ஸ்டா காதலன் பேசுவதை நிறுத்தியதால் 16 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டாபுரத்தைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வாலிபரை கடந்த இரண்டரை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த வாலிபர் சிறுமியிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் சிறுமி.

இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் காதலன் பேசாததால் 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.