பொடுகுதொல்லையா? யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க… இரண்டே நாளில் போயிடும்…!

1063

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல் போன்றவற்றை பாதுகாப்பது என்பது கடினமான செயலாக இருந்து வருகிறது.

கடும்வெயில், மாசு, தூசு போன்றவை சரும ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கூந்தல் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறது. இவற்றை மீட்டெடுப்பது என்பது சற்று சவாலான காரியம் தான்.

ஆனால் முயன்றால் முடியாது ஒன்றும் இல்லை. யோகர்ட் கூந்தலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்குகின்றது.


யோகர்ட் பொடுகை போக்கி, கூந்தல் உதிர்வை தடுக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு யோகர்ட்டுடன் சில பொருட்களை கலந்து பயன்படுத்தலாம். இனி எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

  • வாழைப்பழம்
  • எலுமிச்சை சாறு
  • தேன்
  • யோகர்ட்
  • பிரஷ்

பயன்படுத்தும் முறை

  1. வாழைப்பழத்தை கிண்ணம் ஒன்றில் வைத்து கூழாக நசுக்கவும்.
  2. அதனுடன் யோகர்ட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. எலுமிச்சை சாறு மற்றும் தேனையும் சேர்க்கவும். பிரஷ் ஒன்றை பயன்படுத்தி
  4. இதை எடுத்து தலை மற்றும் கூந்தலில் படும்படியாக தேய்க்கவும்.
  5. 25 முதல் 30 நிமிடங்கள் விட்டு, ஷாம்பூ பயன்படுத்தி கழுவவும்.