போதையில் மணமகன் மணமேடையில் வரதட்சணை கேட்டு தகராறு… திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!

114

வாழ்க்கையில் திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமே விசேஷமான நிகழ்வு. பல வருடங்களாக தங்களது திருமணம் குறித்தும், வரப்போகும் மணமகன் குறித்தும் அவர்கள் கனவுகளைத் தேக்கி வைத்திருக்கின்றனர். காலம் முழுவதும் சேர்ந்து வாழப் போகிறவன் பணத்தாசைப் பிடித்தவனாக இருந்தால் எப்படியிருக்கும்?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் செஹூரில் மணமகன் வீட்டார் ரூ.15 லட்சம் வரதட்சணை மற்றும் கார் கேட்டதால், மணப்பெண் திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதே நேரத்தில் மணமகனும், அவரது நண்பர்களும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

திருமண கொண்டாட்டத்தில் மணமகனும் அவரது உறவினர்களும் மணமகளின் குடும்பத்தினருடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். மணமகனும் அவரது தரப்பினரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது போதையில், தனக்கு வரதட்சணையாக கார் கொடுக்க வேண்டும் என்று மணமகன் தகராறு செய்திருக்கிறார்.

திருமண சடங்கின் போது, ​​சடங்குகளின் ஒரு பகுதியாக, மணமகளின் குடும்பத்தினர் ரொக்கமாக ரூ.12 லட்சம் கொடுத்தனர். இந்த பணம் பத்தாது ரூ15 லட்சம் ரொக்கமாக தந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என மணமகன் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழ்நிலையில் மணமகள் குடும்பத்தினர் பெரும் குழப்பமும், கவலையும் அடைந்தனர். உடனே மணப்பெண் பெரியா மணமகனின் குடும்பத்தின் பேராசையை தனது குடும்பத்திடம் விளக்கமாக கூறி திருமணம் வேண்டாம் என தைரியமாக முடிவெடுத்தார். இதைத் தொடர்ந்து மணமகனும், அவரது உறவினர்களும் ஆத்திரமடைந்து மணமகளின் தரப்புடன் சண்டையிட்டனர்.


இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சண்டையால் மணமகன் குடும்பத்தில் பலருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு திருமணத்தின் போது குழப்பம் விளைவித்ததாகக் குற்றம்சாட்டி,

பிரியா தனது தந்தையுடன் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.