போதை நெட்வொர்க்கில் 25 வயது இளம்பெண்… கல்லூரி மாணவர்கள், ஆபீஸ் பாய், ரூம் பாய் என சாம்ராஜ்ஜியமே நடத்திய மவுசியா!!

121

மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருட்களைத் தொடர்ந்து சப்ளை செய்து வந்த 25 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது தந்தை போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு சிறைத்தண்டனை கைதியாக உள்ள நிலையில், மகள் அதனைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ரகசியமாக கண்காணித்து கைது செய்ய சென்னை கமிஷனர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது.

இந்த சிறப்புக் குழு போதைப்பொருள் கடத்தல் கும்பலை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகிறது. இதனிடையே நேற்று சிறப்புக் குழு அதிகாரிகள் 6 பேர் கொண்ட கும்பலை உயர்நீதிமன்றம் அருகே வைத்துவிட்டு 2 பேர் தப்பிச் சென்றனர்

4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மணலியை சேர்ந்த மவுசியா (வயது 25) என்பது தெரியவந்தது.

இளைஞர்கள், பெண்கள், பப் செல்பவர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மௌசியாவின் தந்தை அக்பர் அலி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


தந்தை கைது செய்யப்பட்டதையடுத்து தந்தையின் தொழிலை கையில் எடுத்த மகள், தந்தையின் பழக்கத்தை பின்பற்றி போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.

அவரிடம் மேலும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.