சோனாலி பிந்த்ரே..
1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “காதலர் தினம்”. இப்படத்தில் நடிகர் குணால், இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்தனர்.
வருடங்கள் பல கடந்தாலும் இன்றும் காதலர்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது இப்படம். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் எல்லோரையும் கவர்ந்தது.
இப்படத்தின் ஹீரோ குணால் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஹீரோயின் சோனாலி 48 வயதில் அழகு மாறாமல் இன்னும் அப்படியே இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்தனை வயசாகியும் பார்க்க இன்னும் அப்படியே இருக்கும் சோனாலியின் அழகில் மயங்கி எல்லோரும் கமெண்ட்ஸ் செய்து வர்ணித்துள்ளனர்.