மகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார் : காரணம் என்ன?

1019

பிரித்தானியாவில் தனது மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் (30). இவர் மனைவி ஜெசிகா. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து ஜெசிகா radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது.

பின்னர் இந்த கருவை ஜெசிகாவின் தயார் ஜூலி சுமக்க முடிவெடுத்தார். மருத்துவர்களின் ஆலோசனைபடி ஜூலி அந்த கருவை சுமந்தார்.


இதை தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜூலி தனது மகள் – மருகனின் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது குழந்தை ஜாக்குக்கு நான்கு வயதாகிறது.

இது குறித்து ஜெனிகின்ஸ் கூறுகையில், என் மாமியார் ஜுலி மேற்கொண்ட இந்த விடயத்தை நான் என்றும் மறக்க மாட்டேன்.

தற்போது என் மகன் ஜாக் சுட்டிதனமாக வளர்ந்து வருகிறான், அவருக்கு கால்பந்து போட்டிகள் பார்ப்பது மிகவும் பிடிக்கிறது என கூறியுள்ளார்.