மஞ்சுவிரட்டு போட்டியில் காளையும், அதன் உரிமையாளரும் பலியான சோகம்!!

79

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் களமிறக்கப்பட்ட மாடும், அதன் உரிமையாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துக் கொண்ட மாடு தென்கரை கண்மாய் அருகில் சென்றுக் கொண்டிருந்த போது அதன் உரிமையாளர், மாட்டைப் பிடிக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில், மாடு கண்மாயில் விழுந்ததில், உடனடியாக அதனைக் காப்பாற்ற முயன்ற உரிமையாளர் ராஜா தாமரை கொடிகளில் கால் சிக்கி பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கண்மாயில் சடலமாக மிதந்த மாட்டையும், அதன் உரிமையாளர் ராஜாவின் உடலையும் மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.