ஸ்ருதி ஹாசன்..
கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் மும்பையில் தனது காதலன் ஹசாரிகா என்பவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையால் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஸ்ருதி ஹாசன் மது பழக்கம் குறித்து பேசியுள்ளார். அதிலும் அவர், எட்டு ஆண்டுகளாக எனது வாழ்க்கையிலிருந்து மதுவைத் தவிர்த்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் மது ஒரு பெரிய பகுதியாக இருந்தது.
குறிப்பிட்ட நேரத்தில் பின்பு மது அருந்துவதால் எனக்கு ஒரு நன்மையையும் இல்லை என்பதை புரிந்துகொன்டேன். குடிப்பழக்கம் உடையவர்களுடன் நான் தொடர்பில் இருக்க மாட்டேன் அவர்களை தவிர்த்துவிடுவேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.