மனித குழந்தை அளவில் ஒரு ராட்சத தவளை… ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ள ஒரு கிராமம்!

663

ராட்சத தவளை…

ஒரு மனித குழந்தையின் அளவு உள்ள, ராட்சத தவளை ஒன்றை பிடித்துள்ளார்கள், சாலமோன் தீவுகள் என்ற இடத்தில் வாழும் மக்கள். Jimmy Hugo (35) என்ற ஒருவர்,

காட்டுப்பன்றிகளை வேட்டையாடும்போது இந்த ராட்சத தவளையைக் கவனித்துள்ளார். வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஒன்றில்,

ஒருவர் அந்த தவளையை தன் காலில் தூக்கி வைத்திருப்பதைப் பார்க்கும்போது, அவர் ஒரு குழந்தையைத் தூக்கி வைத்திருப்பது போல் தோன்றுவதைக் காணலாம்.


அத்துடன், ஒரு சிறுவன் அதை கையில் தூக்கி வைத்திருக்க, அது கிட்டத்தட்ட அவனது உயரத்திற்கு உள்ளதையும் காணலாம்.

பொதுவாக தவளைகளைக் கொன்று சாப்பிட்டுவிடும் அந்த கிராமத்தினர், இந்த அபூர்வ தவளையை கொன்றுவிடாமல் தங்கள் பகுதியில் உலாவ விட்டிருக்கிறார்கள்.