திருப்பூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் – காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (32).
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சமதுக்கும், நிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
நிஷா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தையும் இருக்கிறது.
வருமானம் குறைவாக இருந்தாலும் மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே நிஷாவின் நடவடிக்கைகள் சமதுக்கு பிடிக்கவில்லை, அடிக்கடி போனில் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார்.
இதை சமது பலமுறை கண்டித்தும் நிஷா காதில் வாங்கிக் கொள்ளவில்லை, இதனால் அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
சம்பவதினத்தன்றும் நிஷா போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார், யாரிடம் பேசுகிறாய், போனை கொடு என சமது கேட்க பதிலளிக்காத நிஷா போனை தராமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த சமது, அருகிலிருந்து குக்கரை கொண்டு நிஷாவை தாக்கியுள்ளார்,
இதில் நிலைகுலைந்து போன நிஷாவை சமையலறை கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.
கோபம் தணிந்தவுடன் அருகிலிருந்த பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார், விரைந்து வந்த அதிகாரிகள் நிஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சமதை கைது செய்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.