மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்!!

290

தாம்பரத்தில்..

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட குத்தனூர் பகுதியில் அரசு விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்குள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீஷ் கைலாஷ் (30), பிரியங்கா குமாரி (25) என்ற தம்பதி கடந்த 15 நாட்களாக தங்கி அப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரியங்கா குமாரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. பிரதீஷ் கைலாசுக்கும், பிரியங்கா குமாரிக்கும் நேற்று முன்தினம் இரவு சண்டை ஏற்பட்டுள்ளது.


அதில் ஆத்திரம் அடைந்த பிரதீஷ் கைலாஷ், மனைவி பிரியங்கா குமாரியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு ரயில் மூலம் தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து ரயில் மூலம் சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற கைலாஷை மணிமங்கலம் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனர்.