மனைவியுடன் செல்போனில் தகராறு : நொடிபொழுதில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

463

பீகார்….

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் அபினேஷ் (வயது 26). பொக்லைன் எந்திரம் டிரைவரான இவர்,

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கி வேலைப்பார்த்து வந்தார்.

பாட்னாவில் உள்ள தனது மனைவியிடம் அபினேஷ் அடிக்கடி செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.


நேற்று முன்தினம் இரவு மீண்டும் அபினேஷ், தனது மனைவியுடன் செல்போனில் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

இதில் விரக்தி அடைந்த அபினேஷ், நள்ளிரவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.