உத்தரபிரதேச மாநிலம் இடவா பகுதியை சேர்ந்தவர் முகேஷ் வர்மா. இவர் நகைக்கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி ரேகா. தம்பதிக்கு பவ்யா (வயது 22), காவ்யா (வயது 17) என்ற 2 மகள்களும், அபிஷ்த் (வயது 12) என்ற மகனும் இருந்தனர். முகேஷ் தனது சகோதரர்களுடன் 4 அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் முகேஷ் குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது. இதையடுத்து மனைவி, மகள்கள், மகன் ஆகியோருக்கு தெரியாமல் விஷம் கலந்த உணவை ஊட்டியுள்ளார்.
அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு அனைவரும் இறந்தனர். இடவா காவல் துறையின் மூத்த கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறுகையில், குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தபோது, முகேஷ் அவர்களின் உடல்களை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார்.
இதை பார்த்த மற்ற குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். உடல்கள் வெவ்வேறு அறைகளில் கிடப்பதாக அவர் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு முகேஷ் மருதர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ரயில் முன் பாய்ந்ததும் சுற்றி இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.
உடனே ரயில்வே போலீசார் பிளாட்பாரத்தில் இருந்து விரைந்து வந்து அவரை வெளியே இழுத்து மீட்டனர். இந்த சம்பவத்தில் முகேஷ் லேசான காயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிபு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.