மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன ஏழு வயது சிறுமியின் உயிர் : கதறும் பெற்றோர் : நடந்தது என்ன?

332

அவுஸ்திரேலியா..

பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் விரைவில் சிகிச்சையால் சிறுமியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஐஸ்வர்யா அஸ்வத் என்ற 7 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலுள்ள பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் பல உறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்திருக்கிறார். Streptococcal தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தொற்று செப்சிஸாக மாற்றத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

“நிபுணத்துவ சான்றுகளின் அடிப்படையில், ஐஸ்வர்யா முதலில் பிசிஎச்-க்கு வந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு அவசர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவரது மரணம் தடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்று WA துணை பிரேதப் பரிசோதனை அதிகாரி சாரா லிண்டனின் அறிக்கை கூறுகிறது.


ஐஸ்வர்யா அஸ்வத்தின் பெற்றோர்களான அஸ்வத் சவிட்டுபரா மற்றும் பிரசிதா சசிதரன் ஆகியோர் தங்கள் மகளுக்கு வைரஸ் நோய் தான் வந்துள்ளது என்பதை உறுதி செய்த பின்பு அச்சிறுமியை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமி 90 நிமிடங்கள் காத்திருப்பு அறையில் எந்த வித சிகிச்சையும் அளிக்காது காத்திருக்க வைத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் எத்தனையோ முறை வற்புறுத்தியபோதிலும் இவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.

செவிலியர்கள் முதலுதவி செய்கையில் மருத்துவரிடம் கூறியும் அவர் சிகிச்சை அளிக்கவில்லை என அறிக்கை கூறுகிறது. ஐஸ்வர்யா அஸ்வத் மருத்துவமனைக்கு வந்த மூன்றரை மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

“இந்த வகை செப்சிஸைக் கண்டறிவது கடினம், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆரம்பக்கால ஆண்டிபயாடிக் சிகிச்சை இல்லாமல் அது பெரும்பாலும் ஆபத்தானது” என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஐஸ்வர்யாவின் இறப்பிற்குப் பின்பு குழந்தைகள் இரைப்பை குடல் அறிகுறிகளுடன் இருக்கும்போது, ​​காத்திருப்பு அறை செவிலியர் மூலம் அரை மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மாற்றாக ஒரு புதிய செயல்முறையைப் பரிசீலிக்க CAHS பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரேதப் பரிசோதனை அதிகாரி சாரா லிண்டனின் பரிந்துரைத்துள்ளார்.