மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று! அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம் முடக்கப்பட்டது

1016

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து அவுஸ்திரேலியாவின் இரண்டவது பெரிய நகரான மெல்பேனில் 50 லட்சம் மக்கள் அடுத்த 6 வாரங்களுக்கு வீடுகளிலேயே முடக்கப்படவுள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு பணிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நிறுவப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


கடந்த செவ்வாய்கிழமையன்று மெல்பேனின் விக்டோரிய மாநில எல்லை மூடப்பட்டது. மெல்பேனில் மாத்திரம் நேற்று 134 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.

அத்துடன் முழுமையாக அவுஸ்திரேலியாவில் இதுவரை ஒன்பதாயிரம் தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை 106 கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன.