கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தலையணையை கொண்டு மூச்சடைக்க செய்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் பாலகிருஷ்ண பூஜாரி (வயது 44). இவரது மனைவி பிரதிமா. இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளன.
பிரதிமா எப்போதும் சமூக வலைத்தளங்களில் வீடியோ போடுவது உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது.
குறிப்பாக குடும்பத்துடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் பாலகிருஷ்ண பூஜாரிக்கு கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்துள்ளது.
இதற்காக பாலகிருஷ்ணா மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அன்றைய இரவு பாலகிருஷ்ண பூஜாரி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அவர் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இந்த நிலையில் பிரதிமாவின் நடவடிக்கையில் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை பிடித்து அவரது சகோதரர் விசாரித்துள்ளார்.
அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. பிரதிமா தான் தனது கணவரை கொலை செய்தது தெரிந்தது.
அதாவது பிரதிமாவுக்கு சமூக வலைத்தளம் மூலும் திலிப் என்ற வாலிபர் அறிமுகம் ஆகி உள்ளார். இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனா்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்க வாய்ப்பு
கணவர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்க வாய்ப்பு உள்ளதாக நினைத்த பிரதிமா, தனது கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்துள்ளார். இதனால் பிரதிமாவின் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரதிமா, தனது கணவரை தலையணை வைத்து மூச்சடைத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் எதுவும் தெரியாதது போல் குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனா்.
உடனே அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனா். அந்த புகாரின்பேரில் போலீசார், பிரதிமா மற்றும் அவரது கள்ளக்காதலன் திலிப் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனா். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். கணவரை, கள்ளக்காதலுக்காக மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.