ரூ.15 கோடி மதிப்பிலான தங்க கடத்தல்: யார் இந்த பெண்? வழக்கில் சிக்கிக் கொண்டது எப்படி?

1111

கேரளாவில் சமீபத்தில் நடிகை பூர்ணா அளித்த புகாரின் பேரில் மோசடி கும்பலொன்றை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில் அக்கும்பலுக்கும், தங்க கடத்தலு-கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. திரைத்துறையினர், மொடல்களை மிரட்டி தங்க கடத்தலுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இந்நிலையில் கேரளத்துக்கு ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

அதாவது, கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு கடந்த ஜூன் 30 அன்று ஒரு பார்சல் வந்துள்ளது. இந்நிலையில் தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து முறையான அனுமதியுடன் தூதரகத்தில் ஆய்வு செய்ததில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பார்சலை எடுத்துச் செல்ல சரித் என்பவரை கைது செய்து விசாரித்ததில், சமீபத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டதும், இவர் பின்னணியில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் இருப்பதும் கண்டறியப்பட்டது. தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக பணிபுரிந்த ஸ்வப்னா,


கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டார். தற்போது கேரள அரசின் ஐ.டி. பிரிவின் செயலாளராக பணியில் உள்ளார். ஏர் இந்தியாவிலும் ஸ்வப்னா பணியாற்றியுள்ளார்.

மேலும், அரசின் ஐ.டி. செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஸ்வப்னா நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. சிவசங்கர், முதல்வர் பினராயி விஜயனுக்கு முதன்மைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அடுத்தடுத்த பிரபலங்கள் சிக்குவதால் விசாரணை சூடுபிடித்துள்ளது, தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்ய இயலாது என்பதால் அந்த முகவரியை பயன்படுத்தி வந்துள்ளனர்.