ரூ.5,000 விவகாரம்.. பலியான 2 சிறுவர்கள்.. இரட்டை கொலை செய்த நபரும் என்கவுண்டரில் பலி!!

143

உத்தரபிரதேச மாநிலம் படவுன் நகரில் சலூன் கடை வைத்திருக்கும் முகமது சாஜித் என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணியளவில் தனது பக்கத்து வீட்டு வினோத் தாக்கூர் என்பவரது வீட்டிற்குள் நுழைந்து அவரது மகன்களான 13 வயது ஆயுஷ் மற்றும் 6 வயது அஹான் ஆகியோரை சரமாரியாக வெட்டினார்.

இதில், இரண்டு சிறுவர்களும் ரத்த வெள்ளத்தில் இறந்தனர். மேலும், வினோத்தின் மூன்றாவது மகன் பியூஷ் சஜித்தை கொலையாளி கடுமையாக தாக்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக பியூஸ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சிறுவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யக் கோரி சலூன் கடைக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணையை தீவிரப்படுத்திய உ.பி., போலீசார், குற்றம் சாட்டப்பட்ட முகமது சாஜித் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவரை கைது செய்ய முயன்றனர்.

இதனால், காவல்துறை நடத்திய என்கவுன்டர் தாக்குதலில் கொலையாளி சாஜித் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் சாஜித்தின் சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி சஜித்தின் சகோதரர் ஜாவேத் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.


“குடும்பத்தினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறந்த சிறுவர்களின் தந்தையான வினோத் தாக்கூரிடம் சாஜித் ரூ. 5,000 கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், சாஜித்தின் சகோதரர் ஜாவேதை பிடிக்க சிறப்பு போலீஸ் படை கடுமையாக உழைத்து வருவதாக அப்பகுதி எஸ்எஸ்பி படான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.