லண்டனில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா : ஜேர்மன் நிறுவனத்தின் மகிழ்ச்சியான செய்தி!!

327

கொரோனா..

லண்டன், தென்கிழக்கு மற்றும் கிழக்கு பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நேற்றைய தினம் 691 பேர் கொரோனா தொற்றுக்கு ப லியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 36,804 பேர் நேற்று மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மூன்று பிராந்தியங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு ஏற்ப மரணங்களும் உயரத் தொடங்கியுள்ளன.

இதனால் நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 691 பேர் உயிரிழந்துள்ளனர்.


இது நவம்பர் 25ம் திகதிக்கு பிறகு அதிகபட்ச தினசரி உயிரிழப்பாகும், அத்துடன், கடந்த செவ்வாயன்று பதிவு செய்யப்பட்ட 506 என்ற எண்ணிக்கையையும் விட அதிகமாகும்.

தற்போது பிரித்தானியாவில் மொத்தம் 2,110,314 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 68,307 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து பல நாடுகளுக்கு பயணிக்கும் சர்வதேச விமானங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன.

எவ்வாறாயினும், உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் வகைக்கு இன்னும் ஆறு வாரங்களுக்குள் புதிய தடுப்பு மருந்தை தங்களால் கண்டுபிடித்துவிட முடியும் என்று ஜேர்மனி தடுப்புமருந்து நிறுவனமான பயான் டெக் உறுதிபட தெரிவித்துள்ளது.

உருமாற்றம் பெற்ற கொரோனாவைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் தற்போது தாங்கள் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தடுப்பு மருந்துகள்கூட சில சமயங்களில் இந்த வகை கொரோனா வைரஸை அழிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இது பிரித்தானியா மற்றும் இதர ஐரோப்பிய நாட்டு குடிமக்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.