லஷ்மியாக மாறிய லாரா.. அமெரிக்க பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்!!

2957

தமிழகத்தில்..

சென்னையை சேர்ந்த தம்பதியினர் உஷா மற்றும் ரவி. இவர்களுக்கு ஆஞ்சன் ரவி என்ற மகன் உள்ளார். இவர்கள் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகரின் உறவினர் ஆவர்.

இதில் ஆஞ்சன் ரவி அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். அங்கு, லாரா என்ற பெண்ணுடன் பழகி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஆஞ்சன் மற்றும் அமெரிக்க பெண் லாராவின் திருமணம் சென்னையில் உள்ள அகார்டு ஹோட்டலில் இந்து முறைப்படி நடந்தது.இவர்களின் திருமணமானது மணமகனின் பெற்றோர் முன்னிலையில்,


மணமகளின் தந்தை ஸ்தானத்தில் இருந்து நடிகர் எஸ்.வி.சேகர் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்பு, மணமக்களுக்கு ஆசி வழங்கினர். இதில் அமெரிக்க பெண்ணான லாரா இந்து மதத்தின் மீது உள்ள மதிப்பினால் தனது லாரா என்ற பெயரை லஷ்மியாக மாற்றிக் கொண்டார்.