லிவ் – இன் காதலர்களுக்குள் மோதல்.. மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்!!

76

ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் வசித்து வருபவர் பில்லி துர்கா ராவ் (28). உணவு வழங்குபவராக பணிபுரியும் இவர், சுஷ்மிதாவை, (23) காதலித்து வருகிறார். சுஷ்மிதா, ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வீட்டில் இருந்த டிவி ரிமோட், டீ கப், கண்ணாடி பொருட்களை உடைத்தனர்.

மேலும் நேற்று அதிகாலையில் காதலர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.