வங்கி ஊழியரின் செயற்பாட்டால் தம்பதியர் மேற்கொண்ட விபரீத காரியம்!!

378

பட்டுக்கோட்டை…

பட்டுக்கோட்டை அருகே வங்கிக் கடன் தவணையை செலுத்தவில்லை எனக்கூறி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கொ.டுத்த தொந்தரவால் கணவன்-மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி (55). இவரது மனைவி சவரியம்மாள். சமோசா வியாபாரம் செய்து வரும் அருள்சாமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் இரண்டு மாதங்களாக பெய்யும் தொடர் மழை மற்றும் கொரோனா காரணத்தால் தொழில் சரியில்லாததால் வங்கிக் கடன் தவணையை செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.


இதனால், வங்கி ஊழியர்கள் போனிலும் நேரிலும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாகவும் மரியாதைக் குறைவாக பேசியதாகவும் தெரிகிறது.

இதில் வி.ர.க்.தியடைந்த அருள்சாமி மற்றும் சவரியம்மாள் இருவரும் நேற்று வி.ஷ.ம.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.னர்.

இதையடுத்து அருள்சாமியின் மகன் ஆரோக்கிய செபாஸ்டின் கொடுத்த பு.காரின் பேரில் சேதுபாவாசத்திரம் போ.லீசார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து இருவரது உ.டலையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.