விஞ்ஞானிகள் எச்சரித்ததை அடுத்து பிரான்ஸ் தலைநகரில் புதிய விதி அமுல்..! அதிகாரிகள் முக்கிய உத்தரவு!!

935

பிரான்ஸ்…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் நகரின் நெரிசலான பகுதிகளில் முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த உத்தரவு 11 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தும் என்று பொலிசார் தெரிவித்தனர்.

எந்த நேரத்திலும் பிரான்ஸ் வைரஸின் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும் என்று அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசகர்கள் செவ்வாயன்று எச்சரித்ததை அடுத்து இந்த புதிய உத்தரவு வந்துள்ளது.

ஜூலை நடுப்பகுதியில் இருந்து பாரிஸில் வைரஸ் பரவலாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகரில் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் ஏற்கனவே கட்டாயமாகப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய உத்தரவு திங்களன்று முதல் நடைமுறைக்கு வரும், முகக்கசவம் கட்டாயமாக அணிய வேண்டிய மண்டலங்கள் வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று ன பாரிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்..

பிரான்சில் தேசிய அளிவில் கொரோனா சோதனை மேற்கொள்பவர்களில் நோய்த்தொற்று உறுதி செய்பவர்களின் சராசரி 1.6% ஆக உள்ளது, தேசிய சராசரியுடன் ஒப்பிடும் போது பாரிஸ் பகுதியில் 2.4% ஆக உள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாரிஸில் ஒவ்வொரு நாளும் 400 பேருக்கு கொரோனா உறுதியாகிறது, 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர் என நகர அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.