விமானத்தில் உள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்த நபர்; காரணம் என்ன?

375

கொரோனா வைரஸ்……

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

பொதுவாக மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளியை கடைபிடிப்பது முககவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்தோனேசியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படாமல் இருக்க நபர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் ஜக்கார்ட்டாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் பா லி நகரத்துக்கு தன் மனைவியுடன் செல்ல திட்டமிட்டார். ஆனால் பிற பயணிகளுடன் பயணித்தால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தான் செல்லவிருக்கும் பயணிகள் விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளார். இதற்காக அவர் 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவழித்திருக்கலாம் என கூறப்படுகிறது.


தான் தனது மனைவியுடன் அந்த விமானத்தில் பயணித்தது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர், கொரோனா பரவம் காரணமாக தனது மனைவியுடன் செல்ல முழு விமானத்தையும் முன்பதிவு செய்ததோம்,

தங்களை தவிற யாரும் அந்த விமானத்தில் இல்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டோம் இந்த விமானத்தை முன்பதிவு செய்தபோது பிரைவேட் ஜெட்டை விட மலிவானது என்பதை தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். இறுதியாக விமானத்தை விட்டு வெளியேறுவது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்ட அவர் பேய் கப்பலே விடைபெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.