விவாகரத்தால் உலகின் பணக்காரப் பெண் என்ற பெருமையை பெற்ற பெண் : யார் தெரியுமா?

338

பணக்காரப் பெண்..

விவாகரத்து செய்ததால் உலகின் பணக்காரப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஒரு பெண் . அந்த பெண் வேறு யாருமல்ல, இன்னொருவரின் மனைவியை கவர்ந்து கொண்டு மனைவியை கைகழுவிய அமேசான் நிறுவனரான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவியான மெக்கன்சி ஸ்காட்தான்.

அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ், தனக்கு அறிமுகமானவரும் செல்வந்தருமான Patrick Whitesell என்பவரின் மனைவியான Lauren Sanchez என்னும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக வெளியான தகவல் உலகையே அதிரவைத்தது.

அதைத் தொடர்ந்து இரு தம்பதிகளும் தத்தம் துணைகளை விவாகரத்து செய்தார்கள். ஜெப் பெசோஸ் மெக்கன்சியை விவாகரத்து செய்தபோது அவருக்கு ஜீவனாம்சமாக 19.7 மில்லியன் அமேசான் பங்குகளை, அதாவது 4 சதவிகித பங்குகளை கொடுத்தார்.


அதன் மதிப்பு 37.1 பில்லியன் டொலர்கள்… அதைத் தொடர்ந்து உலகின் 22ஆவது பணக்காரர் என்ற பெருமை மெக்கன்சிக்கு கிடைத்தது. இதற்கிடையில், ஊரடங்கின்போது வீட்டிலிருந்துகொண்டே ஆன்லைனில் பொருட்களை வாங்கியவர்கள் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியதில் மெக்கன்சியின் கணக்கில் மேலும் 30.3 பில்லியன் டொலர்கள் சேர்ந்துள்ளது.

இதனால் மெக்கன்சியின் மொத்த சொத்து மதிப்பு 67.4 பில்லியன் டொலர்களாக்கியிருக்கிறது. தற்போது உலகின் 12ஆவது பணக்காரர் என்ற பெருமையுடன், உலகின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பெண் என்ற பெருமையும் மெக்கன்சிக்கு சேர்ந்துள்ளது. இதற்கிடையில், அவ்வளவு ஜீவனாம்சம் கொடுத்த பிறகும், உலகின் பணக்கார்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டொலர்கள்.

இந்நிலையில், பணக்கார்கள் மேலும் பணக்கார்களாகிக்கொண்டே செல்ல, அதே அமெரிக்காவில் பல மில்லியன் அமெரிக்கர்கள் வேலையிலிருந்து விரட்டப்பட்டு வாழ வழியின்றி திணறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது.