ரஷ்யாவில் …..
ரஷ்யாவில் நதியில் குளிக்கச் சென்ற தமிழகத்தை சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். யுனானி மருத்துவரான இவர் தன்னுடைய மகான முஹம்மது ஆஷிக்(22)-ஐ, ரஷ்யாவில் இருக்கும் வேலோகிரேட் ஸ்டேட் மெடிக்கல் கல்லூரியில் சேர்த்துள்ளார்.
இதையடுத்து முஹம்மது ஆஷிம் 5-ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், அங்கிருக்கும் வால்கா நதிக்கு குளிப்பதற்காக,
தன்னுடை சக மாணவர்களான சென்னையை சேர்ந்த ஸ்டீபன், ராமு விக்னேஷ் மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோருடன் சென்றுள்ளார்.
அப்போது நதியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பார்தவிதமாக நான்கு பேரும் நீரில் மூழ்கினர். இதனால் இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்பு படையினர் விரைந்த போதும், நான்கு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவம் படிக்க சென்ற இடத்தில், நான்கு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உயிரிழந்த முஹம்மது ஆஷிக் புகைப்படம் வெளியாகியுள்ளது.