அமெரிக்காவில், இந்திய பெண் ஆராய்ச்சியாளர் சர்மிஸ்தா சென் என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சர்மிஸ்தா சென். 43 வயது மதிக்கத்தக்க இவர் திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பிளானோ நகரில் கணவருடன் குடியேறினார்.
மூலக்கூறு உயிரியல் படித்துள்ள இவர், புற்றுநோயாளிகளை வைத்து ஆராய்ச்சு நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சர்மிஸ்தா சென் எப்போதும், தினந்தோறும் காலையில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம், என்பதால் பிளானோ நகரில் இருக்கும் பூங்கா ஒன்றில் ஓட்டப்பயிற்சிக்காக சென்றுள்ளார்.
ஆனால் அவர் வீடு திரும்பவேயில்லை. இந்நிலையில், தான் அவரின் உடல் கால்வாய் அருகே கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சர்மிஸ்தா சென் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், பகாரி மான்கிரீப் (29) என்ற கொள்ளையனை பொலிசார் கைது செய்தனர்.
இருப்பினும் இந்த கொலை எப்படி நடந்தது? என்பது குறித்து எந்த ஒரு ஆதாரமும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை.
இதனால் பொலிசார் பிரேதபரிசோதனை முடிவை எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அதிலும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. தொடர் விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும்.
இதற்கிடையில், சர்மிஸ்தா சென் கொல்லப்பட்டு கிடந்த இடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.