வெளிநாட்டில் மொத்த குடும்பத்தையும் பள்ளத்தில் தள்ளி கொல்ல முயன்ற இந்திய மருத்துவர் : தப்பிக்க சொன்ன கதை!!

638

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மொத்த குடும்பத்தையும் பெரும் பள்ளத்தில் தள்ளி கொல்ல முயன்ற இந்திய மருத்துவர், கொலை வழக்கில் இருந்து தப்ப புதிய காரணம் ஒன்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

அவரது காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நீதிமன்றம் அனுமதி அளிக்கும் என்றால், அவர் மீதான கொலை முயற்சி வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய மருத்துவரான 42 வயது தர்மேஷ் பட்டேல், வேண்டுமென்றே தனது டெஸ்லா வாகனத்துடன் 250 அடி பள்ளத்தில் குதித்ததாகவும், தனது குடும்பத்தினரை கொலை செய்யும் முயற்சி அது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


ஆனால் தற்போது நீதிமன்றத்தை நாடிய அவர், உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். அப்படியான சூழலில், அவருக்கு சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டு, அவர் சிகிச்சையை நிறைவு செய்தால், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படும் என்றே கூறுகின்றனர்.

மருத்துவர் தர்மேஷ் பட்டேல் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதால், அதன் காரணமாக கடுமையான தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அவரது சட்டத்தரணி குழு தற்போது புதிதாக உளவியல் சிகிச்சை தொடர்பான புதிய கதையுடன் களமிறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

முதலில் தமது டெஸ்லா வாகனத்தில் பிரச்சனை இருந்தது என சாதிக்க முயன்று தோல்வி கண்டுள்ளார் மருத்துவர் பட்டேல். ஆனால், ஜனவரி மாதம் விபத்து நடந்த பின்னர், பட்டேலின் மனைவி மீட்புக்குழுவினரிடம், இந்த விபத்து திட்டமிட்டு தமது கணவரால் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். அதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் இருந்து பட்டேலின் மனைவியும் இரு பிள்ளைகளும் உயிர் தப்பியிருந்தனர்.

தற்போது பட்டேல் கோரும் உளவியல் சிகிச்சை தொடர்பில், முன்னர் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நீதிமன்றத்தில் அவர் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சிகிச்சை அனுமதி அளிக்கும்,

பட்டேல் விவகாரத்தில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் அனுமதிக்கப்படலாம் என கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற கோரிக்கைகள், பெரும்பாலும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே நம்புகின்றனர்.