வேணா விட்டுடுங்க… கதறிய சிறுமி அடுத்த நொடியே பரிதாபமாக பலியான சோகம்!!

215

தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள டி.கோதபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கசன் சோமையா. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சைதுலு மற்றும் கத்தரி சோமையாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கிராமத்தில் நடந்த திருவிழாவின் போது சைதுலு,கத்தரி சோமையா ஆகிய இருவரும் கசன் சோமையாவின் வீட்டுக்குச் சென்று கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதனால் சோமையாவின் கால் முறிந்துள்ளது. அவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கணவரைக் காப்பாற்ற முயன்ற சோமையாவின் மனைவிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலை சோமையாவின் 14 வயது மகள் பவானி பார்த்துக் கொண்டிருந்தாள். தாய், தந்தையை தடியால் அடிப்பதை நிறுத்துமாறு இருவரிடமும் கெஞ்சினார். சிறுமியின் குரலுக்கு செவிசாய்க்காமல் தாக்குதலை தொடர்ந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிக அழுத்தம் ஏற்பட்டு பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.