கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பீச்சி அணையில் 4 மாணவிகள் தவறி விழுந்த நிலையில், அலீனா(16), ஆன் கிரேஸ் (15) ஆகிய இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு மாணவி கவலைக்கிடமான நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன் கிரேஸ், ஐரீன், அலீனா மற்றும் நிமா, நிமாவின் சகோதரி ஹிமாவின் நண்பர்கள் என குழுவினர் தேவாலய விருந்து கொண்டாட்டங்களுக்காக பீச்சி அணைக்கட்டுக்குச் சென்றுள்ளனர்.
பீச்சி நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த தோழி ஒருவரைக் காப்பாற்ற குழுவினர் முயற்சித்தபோது, நான்கு மாணவிகளும் தண்ணீரில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஒரு மாணவி உயிரிழந்த நிலையில், பட்டிக்காட்டைச் சேர்ந்த 16 வயது அலீனா திருச்சூரில் உள்ள ஜூபிலி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் பட்டிக்காட்டைச் சேர்ந்த எரின் என்பவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். திருச்சூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பீச்சியைச் சேர்ந்த 12 வயது சிறுமி நிமாவின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய மருத்துவ அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.