அமெரிக்காவில்..
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்திற்கு அருகில் உள்ள ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் மற்றும் 3 செல்லப்பிராணி நாய்கள் என அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை நடந்த வீட்டிற்கு அவர்களது உறவினர் ஒருவர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாமல் போனதை அடுத்து உறவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தொலைபேசியில் அழைத்த உறவினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பொலிஸார் சோதனை செய்த போது, வீட்டில் உள்ள அனைவரும் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய பொலிஸார், இது தற்கொலை போன்று தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் செல்லப் பிராணிகளுடன் சேர்த்து ஒட்டுமொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி காரணம் மற்றும் குற்றவாளி குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.