அயர்ன் செய்த போது சோகம்.. 14 வயது மாணவன் பரிதாபமாக பலி!!

288

மழைக்காலங்களில் மின் சாதனங்களை கவனமுடன் பயன்படுத்துங்க. கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்க.

திருவள்ளூர் அருகே உள்ள நெமிலி அகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிபாபு இவரது மகன் தீபக்குமார் (14).

சிறுவன் தீபக்குமார் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று தீபக்குமார் தனது வீட்டில் தனது சட்டையை எலக்ட்ரிக் அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மாணவன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் உதவியுடன் அவரை விடியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவனின் உடலில் முன்னேற்றம் ஏற்படாததால் மேல் சிகிச்சைக்காக பந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவனைப் பரிசோதித்த டாக்டர்களும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தனர்.


இதனையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சார அயன் பெட்டியை வைத்து துணியில் தேய்க்கும் முன் ஒயரை முழுமையாகச் சோதித்து அயன் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.