போர்ச்சு கல்லுக்கு சுற்றுலா சென்ற போது பிரித்தானிய தம்பதியின் மகள் காணாமல் போன நிலையில், அவள் இன்னமும் எங்கேயோ உயிரோடிருப்பாள் என்றே அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
மேட்லின் மெக்கேன் என்ற அந்த குழந்தையின் பெற்றோரான பிரித்தானிய தம்பதியான கேட் மற்றும் கெரி மெக்கேன் தம்பதியர், இன்னமும் தங்கள் மகள் எங்கோ உ யிரோடிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் நிலை யில், அவள் இறந்துபோனதாகக் கூறி அவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளனர் ஜேர்மன் பொலிசார்.
ஜேர்மன் விசாரணை அதிகாரியான Hans Christian Wolters பத்திரிகையாளர்கள் முன் பேட்டியளிக்கும்போது, மேட்லின் இறந்துவிட்டாள் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம், சாட்சியங்களை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் மேலும் ஒரு பெரிய விடயத்தில் ஜேர்மன் பொலிசார் கடுமையாக சொதப்பியுள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2013இல் ஜேர்மன் பொலிசார் தாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்கிறோம் என்பதை உணராமலே, குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் Bruecknerக்கு துப்பு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
ஜேர்மனியின் பெடரல் கிரிமினல் பொலிசாருக்கு Brueckner குறித்த ரகசிய தகவல் ஒன்று கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் Brunswick நகர பொலிசாரை தொடர்பு கொண்டு, Brueckner குறித்து விசாரிக்குமாறு கூறியுள்ளனர்.
ஆனால், Brunswick நகர பொலிசார் Bruecknerஐ விசாரணை க்கு அழைக்கும்போது, மேட்லின் காணாமல் போன விடயம் தொடர்பாக விசாரிக்கவேண்டும் என்று கூறி அவருக்கு கடிதம் ஒன்றில் தெரிவித்து விசாரணை க்கு வருமாறு அவரை அழைத்துள்ளனர்.
அந்த கடிதம் நிச்சயமாக Bruecknerக்கு தான் சந்தேக வளையத்திற்குள் வந்திருப்பதை குறித்து எச்சரித்து, மேட்லின் தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்கு போதுமான நேரத்தைக் கொடுத்திருக்கும் என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குற்றவாளிக்கே துப்பு கொடுத்த Brunswick நகர பொலிசார், சந்தேகத்துக்குரிய குற்றவாளி தங்கள் அருகிலேயே இருந்தபோதும் அவரை தப்ப விட்ட போர்ச்சு கல் பொலிசார் என, பொலிசாரின் இந்த பெரிய சொதப்பல்களால் மேட்லின் வழக்கு 13 ஆண்டுகளாகியும் இழுத்துக்கொண்டே போகிறது.