ஆடு மேய்க்க சென்ற இடத்தில் ஆறு அடி பள்ளத்திற்குள் விழுந்து சிக்கிய சிறுவன்! போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!!

865

தமிழகத்தில் ஆறு அடி பள்ளத்திற்குள் விழுந்த சிறுவனை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரமாக போராடி மீட்டுள்ளனர்.

திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில்,  12 வயதான ஆடுமேய்க்கும் சிறுவனான ஆதித்யா வழக்கம் போல்  ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது செல்போன் அங்கிருந்த பாறையின் உள்ளே விழுந்துள்ளது. இதனால் அதனை எடுப்பதற்காக ஆதித்யா முயன்றுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக அந்தப் பள்ளத்தில் விழுந்துவிட்டான்.

இதனால் வெகு நேரம் ஆகியும், ஆதித்யா காணததால், அவனது சக நண்பர்கள், அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பள்ளத்தில் விழுந்த ஆதித்தா சத்தம் போடுவதைக் கண்டுள்ளனர்.


ஆறு அடி பள்ளத்தில் விழுந்துவிட்டதால், சிறுவர்கள் உடனடியாக தாத்தையங்கார் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தகவலின் அடிப்படையில், நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி ஆதித்யாவை உயிருடன் மீட்டனர்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.