ஆத்திரத்தில் மருமகளை 25 துண்டுகளாக வெட்டிய கொடூர மாமியார்!!

169

குடும்ப சண்டையில் 7 மாத கர்ப்பிணி மருமகளை, 25 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் தாஸ்கா நகரில் ஜெஹ்ரா என்ற 26 வயது இளம்பெண் தனது மாமியாருடன் வசித்து வருகிறார்.

இவரது கணவர் காதர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஜெஹ்ரா தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கின்றார்.

இந்நிலையில் ஜெஹ்ராவுக்கும், அவரது மாமியாருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று மாமியார், மருமகள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த மாமியார், 7 மாத கர்ப்பிணி மருமகளை, 25 துண்டுகளாக கத்தியால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.