காதலை ஏற்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனா்.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் நத்திகொட்டா பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருத்தரை காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். எனினும் ராகவேந்திரா தொடர்ந்து சிறுமியை காதலிக்கும்படி கூறி வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராகவேந்திரா, அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி உள்ளார். மேலும் சிறுமியுடன் வாக்குவாதமும் செய்துள்ளார்.
எனினும் சிறுமி காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராகவேந்திரா, சிறுமி மீது தான் மறைத்து வைத்து எடுத்து வந்த பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார்.
இதில் அந்த சிறுமி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் கதறி உள்ளார்.
எனினும் தீ உடல் முழுவதும் பரவி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது ராகவேந்திராவின் உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனா். அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.
அதன்போில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனா். அவர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனா். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது ராகவேந்திரா மற்றும் பள்ளி மாணவி இடையே காதல் ஒரு தலைக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தனது காதலை பலமுறை எடுத்த கூறியும், பள்ளி மாணவி அதனை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ராகவேந்திரா, மாணவி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளது தெரிந்தது. இதையடுத்து காயமடைந்த ராகவேந்திராவை போலீசார் கைது செய்தனா். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.