ஆரோக்கியமாக இருந்த பெண்… நண்பருடன் செய்த காரியத்தால் உயிரிழந்த சோகம்!!

345

வெறும் வயிற்றில் மது அருந்திய பெண் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மது அருந்தும் பலரும் சில நேரங்களில் உணவு அருந்தாமல் வெறும் வயிற்றில் மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டு எனும் 27 வயதான பெண் ஒருவர் சமீபத்தில் தனது நண்பருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தியுள்ளார்.

எப்போதும் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி என ஆரோக்கியமாக இருந்த அலைஸ் புர்ட்டன் என்ற அந்த பெண் அடிக்கடி மது அருந்துபவர் கிடையாதாம்,

அதேபோல் எப்போதும் அளவுக்கு அதிகமாகவும் குடிக்கமாட்டாரம், அப்படி இருக்க தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்திய அவர் சில மணி நேரங்களில் இறந்துள்ளார்.


இதுகுறித்து கூறியுள்ள அவரது 8 வருட நண்பர், அலைஸ் புர்ட்டன் இறப்பதற்கு முன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், ஆனால் மது அருந்துவதற்கு முன் அவர் எதுவும் சாப்பிடவில்லை, வெறும் வயிற்றில் மது அருந்தினார்.

மது அருந்திய சில மணி நேரங்களில் வீட்டில் இருந்து எழுந்து தோட்டத்திற்கு சென்ற அவர் அங்கையே சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அவரது வயிற்றில் ஒரு அமிலம் தூண்டப்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.