ஆவியைத் திருமணம் செய்ததன் பலனை அனுபவிக்கும் பெண்!!

2593

ஆவியை..

நீண்ட காலம் முன்பு மரணமடைந்த போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பாடகி ஒருவர், திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

ஆனால், அதன் பலனை தான் அனுபவித்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளில், மரத்தை திருமணம் செய்பவர்கள், பொம்மையைத் திருமணம் செய்பவர்கள், நதியைத் திருமணம் செய்பவர்கள், தன்னைத்தான் திருமணம் செய்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

அவ்வகையில், பிரித்தானியாவின் Oxfordshireஐச் சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியருமான Brocarde என்பவர், நீண்ட காலம் முன்பு மரணமடைந்த Edwardo என்னும் போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், Edwardoவுடனான Brocardeஇன் திருமணம் ஒரே ஆண்டுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது. Edwardoவுக்கு நடிகை மர்லின் மன்றோ என்றால் உயிராம்.


மர்லின் மன்றோவின் ஆவி தங்கள் திருமணத்தில் பங்கேற்ற நாள் முதல் அவர் மீது பைத்தியமாகி அவர் பின்னால் சுற்றத்துவங்கிவிட்டாராம் Edwardo. மேலும்,

குழந்தை ஒன்றின் அழுகுரல் மூலமாகவும் Edwardo தன்னை தொந்தரவு செய்யத் துவங்கிவிட்டதாகவும் தெரிவித்த Brocarde, தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட அதே ஆலயத்தில் சென்று தங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

ஆவியைத் திருமணம் செய்ததன் பலனை அனுபவிக்கும் Brocarde
ஆனால், விவாகரத்து செய்தும், Edwardo தன்னை தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார் Brocarde. Edwardoவுடனான வாழ்வு முடிந்துவிட்டது என முடிவு செய்து,

பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்குச் சென்றிருந்தாராம் Brocarde. ஈபிள் கோபுரத்துக்குச் சென்றிருந்த Brocarde, பிரான்ஸ் நாட்டவரான ஆண் ஆவி ஒன்றை சந்தித்துள்ளார்.

தன்னை Fabienne என அறிமுகம் செய்துகொண்ட அந்த ஆவி, Brocardeயின் பின்னாலேயே அவர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்துவிட்டதாம். சரி, பாரீஸ் நகர ஆவி ஒன்றுடன் ஜாலியாக இருக்கலாம் என முடிவு செய்தாரான் அவர்.

ஆனால், பின்னர், தான் வேறு யாருமில்லை, Edwardoதான் என்று கூறியதாம் அந்த ஆவி. சரி, இனி மனிதர்களைக் காதலிக்கலாம் என Brocarde ஆண் நண்பர்களுடன் பழகத் துவங்கினாலும் தொந்தரவு செய்கிறதாம் Edwardoவின் ஆவி.

எப்படியாவது, Edwardoவிடமிருந்து விடுபடலாம் என ஆவிகளுடன் பேசும் ஒருவரைச் சென்று சந்தித்திருக்கிறார் Brocarde. ஆனால், இனி ஒருபோதும் Edwardoவின் ஆவி உங்களை விட்டுப் பிரியாது, எப்போதுமே உங்களுடன்தான் இருக்கும் என்று கூறிவிட்டாராம் அந்த நபர். ஏண்டா இந்த ஆவியைக் காதலித்துத் தொலைத்தோம் என்றிருக்கிறதாம் Brocardeக்கு!