இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் தன் காதலரை சந்திப்பதற்காக அமெரிக்காவிலிருந்து ஒரு பெண் வந்துள்ள நிலையில், இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
அமெரிக்கரான ஜாக்லின் (Jaclyn Forero) ஒரு புகைப்படக்கலைஞர். இன்ஸ்டாகிராம் வாயிலாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் சந்தனை சந்தித்துள்ளார் ஜாக்லின்.
இன்ஸ்டாகிராமில் தொடங்கி வீடியோ காலில் காதல் வளர, காதலரை சந்திக்க இந்தியாவுக்கே வந்துவிட்டார் ஜாக்லின்.
தங்கள் காதல் கதையை ஒரு வீடியோவாக இன்ஸ்டாகிராமில் ஜாக்லின் வெளியிட, ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
ஜாக்லினும் சந்தனும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில், சந்தனை அமெரிக்கா அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் ஜாக்லின்.