இனி எங்களால் பிரிந்து வாழ முடியாது : அரசிடம் மன்றாடும் 70 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்த தம்பதிகள் : நடந்தது என்ன?

3383

கனடா..

கனடா மாகாணமான நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் 86 வயதான தம்பதிகளை சுகாதார பாதுகாப்பு விதிகளுக்காக பிரித்து வைத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அத்தம்பதிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் ஜிம் மற்றும் தெரசா வூல்ப்ரே ஆகிய இரு தம்பதிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் 86 வயதை நெருங்கிவிட்டனர்.

கனடா சுகாதார அமைப்பின் விதிப்படி மிகவும் வயதானவர்களுக்கு மருத்து சிகிச்சை அளித்து கவனித்துக் கொள்ளும் சட்டமிருக்கிறது. அதன்படி ஒவ்வொருவரது உடல் நலத்திற்கு ஏற்றார் போல் இது பிரிக்கப்படுகிறது.


இதில் தெரசா வூல்ப்ரே மூன்றாம் நிலையில் இருக்கிறார். இவர் இல்லங்களில் மருத்துவமனை பராமரிப்பில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார்.

ஜிம் முதல் நிலையிலிருப்பதால் அவருக்கு குறைவான கவனிப்பே போதுமான இல்லங்களில் இருந்தால் போதுமென இருவரையும் தனிதனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.

ஜிம் தினமும் வந்து தனது மனைவியை பார்த்து விட்டு போனாலும் அவருக்கு அவரது மனைவியுடனே வாழ வேண்டுமென ஆசை இருக்கிறது.86 வயதான இவர்கள் கிட்டதட்ட69 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

ஜிம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தெரசாவை சந்திக்கிறார், ஆனால் அவர்கள் பெரும்பாலான நாட்களை தனி வீடுகளில் கழிக்கிறார்கள். “நான் அதை மிகவும் கடினமாக உணர்கிறேன், ஆனால் அவள் என்னை விட கடினமாக அதைக் காண்கிறாள்,” என்று அவர் கூறியுள்ளார்.

“ஒவ்வொரு மாலையும் நான் கிளம்பும் போது அவள், “ஐயோ, உன்னால் இருக்க முடியாதா?” என ஏக்கத்தோடு கேட்கிறாள். என்னால் இந்த பிரிவை தாங்க முடியவில்லை என ஜிம் வேதனைப்படுகிறார்.

அவர்களின் மகள் மர்லின் கோல்ட், தனது பெற்றோரை மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ வைக்கப் போராடுகிறாள். “இது நெஞ்சை பதற வைக்கிறது.எத்தனை தம்பதிகள் 86 வயதை எட்டுகிறார்கள், கடைசி காலத்தில் ஒன்றாக இருந்தால் இருவரும் சந்தோசமாக இருக்க முடியும், ஆனால் அவர்கள் பிரிந்து செல்ல வேண்டும்?” என அவரது மகள் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய சுகாதார அமைச்சர் டாம் ஆஸ்போர்ன் குறுகிய காலத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் எனக்கூறியுள்ளார். எப்படியாவது தனது தாய், தந்தையை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டுமென மகள் போராடுவது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.