இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்த நிகழ்வுகள் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் உடைய முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வது தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் வேலையில் கவனத்தை சிதற விடாமல் பார்த்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் இருந்து வந்த ஒற்றுமை சீர்குலைய வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. சிவனை வழிபடுங்கள் நன்மை நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புதிய முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுடைய ஆதரவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நினைத்த அளவிற்கு லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற நிலை காரணமாக வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களை பெற விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் அற்புதமான வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதில் பிரச்சனைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனஅமைதி பெற வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய உத்திகளை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அனுகூல பலன் கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சினைகள், கொடுக்கல் வாங்கல் தொல்லைகள் நீங்கும். கடன் பிரச்சனை தீர பைரவரை வழிபட்டு வாருங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மனதில் இருக்கும் பாரம் குறையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்திகள் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் வலுவாக வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமான வரை பொறுமை காப்பது மிகவும் நல்லது. இதுவரை இருந்து வந்த கடன் தொகைகள் குறையும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு பெருகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்கள் தேவையில்லாத அலைச்சல்களை சந்தித்தாலும் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.