இப்படி முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாது… ஏன்னு தெரியுமா?

142

உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் சமைக்காமல் வைத்திருப்பதால் முளை விட்டுவிடும். அப்படி முளைத்து வந்த உருளைக்கிழங்கை உட்கொள்வது பாதுகாப்பானதா இல்லையா என்பது குறித்து விவாதங்கள் நடைபெறும்.

உருளைக்கிழங்கில் முளைவிட்ட பகுதியை நீக்கிவிடும் பட்சத்தில் இதனை உட்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது என்று ஒரு புறம் கூறுகின்றனர்.

ஆனால் முளைவிட்ட உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது, அதனால் புட் பாய்சன் ஏற்படக்கூடும் என்று ஒருசிலர் எச்சரித்து வருகின்றனர்.

முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பதை ஆராய்ச்சி அடிப்படையில் அறிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

சோலோனின் மற்றும் சகோனின் போன்றவற்றின் இயற்கை ஆதாரமாக விளங்குவது உருளைக்கிழங்கு. இவை இரண்டும் கத்திரிக்காய்,தக்காளி போன்ற பல்வேறு இதர உணவுகளில் காணப்படும் க்ளைக்கோஆல்கலாய்டு ஆகும்.


க்ளைக்கோஆல்கலாய்டு மிகக் குறைவான அளவு இருக்கும்போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் .

அன்டிபையோட்டிக் தன்மைகள் , இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைக்கும் தன்மை போன்றவை இதன் நன்மைகள் ஆகும். ஆனால் அதுவே அதிக அளவு உட்கொள்வதால் அவை நச்சுகளாக மாற்றம் பெறுகின்றன.

உருளைக்கிழங்கு முளைவிடும்போது அதன் க்ளைக்கோஆல்கலாய்டு அளவு அதிகரிக்கத் தொடங்கும் .

ஆகவே முளைவிட்ட உருளைக்கிழங்கை உட்கொள்வதால் இந்த கூறுகள் உடலில் அதிகரிக்க காரணமாகிறது. முளைவிட்ட உருளைக்கிழங்கை உட்கொண்டு சில மணி நேரம் முதல் அடுத்த ஒரு நாளில் இதன் அறிகுறிகள் தென்படும்.

​ஆபத்துகள்

அதிகரித்த க்ளைக்கோஆல்கலாய்டு அளவு குறைவான டோஸில் கொடுக்கப்படுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

ஆனால் அதிக அளவு உட்கொள்வதால் இரத்த அழுத்தம் , வேகமான நாடித்துடிப்பு, காய்ச்சல் , தலைவலி, குழப்பம் , சில நேரங்களில் இறப்பும் சம்பவிக்கலாம்.

மேலும் முளைவிட்ட உருளைக்கிழங்கு , கர்ப்ப காலத்தில் உட்கொள்வதால் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. ஆகவே முளைவிட்ட உருளைக்கிழங்கு உட்கொள்வதைத் தவிர்ப்பதால் கர்ப்பிணிகளுக்கு நன்மை உண்டாகிறது.

முளைவிட்ட உருளைக்கிழங்கில் உள்ள அதிக அளவு க்ளைக்கோஆல்கலாய்டு , மிக அதிக அளவு எடுத்துக் கொள்வதால் மனிதர்களுக்கு நச்சுத்தன்மையை அதிகரிக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் இதனை முற்றிலும் தவிர்ப்பது குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் .

நச்சுக்களை அகற்ற முடியுமா?

உருளைக்கிழங்கின் இலைகள்,, பூக்கள், கண்கள் மற்றும் முளைகளில் க்ளைக்கோ ஆல்கலாய்டு உள்ளது.

முளைவிட்ட உருளைக்கிழங்கு மட்டுமல்லாமல் சேதமடைந்த உருளைக்கிழங்கு, பச்சை நிறம் கொண்ட உருளைக்கிழங்கு, கசப்பு சுவை கொண்ட உருளைக்கிழங்கு ஆகிய மூன்று வகைகளிலும் க்ளைக்கோஆல்கலாய்டு அளவு அதிகரித்தே காணப்படுகிறது.

எனவே இந்த முளை, கண், பச்சை தோல், சேதமடைந்த பாகம் ஆகியவற்றை வெட்டி எறிந்துவிட்டு மற்ற பகுதியை பயன்படுத்துவதால் அதன் நச்சுத்தன்மை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகிறது.

மேலும் உருளைக்கிழங்கின் தோலை உரித்துவிட்டு பொரிப்பதால் க்ளைக்கோஆல்கலாய்டு அளவு குறைகிறது.

வேகவைப்பது, பேக்கிங் செய்வது , மைக்ரோவேவில் சமைப்பது போன்றவற்றில் ஓரளவிற்கு பாதிப்புகள் இருக்கலாம்.

ஆனால் இந்த முயற்சிகள் க்ளைக்கோஆல்கலாய்டு நச்சுத்தன்மையை முற்றிலும் தடுக்கிறது என்பது உறுதி செய்யப்படவில்லை.

முளைவிட்ட உருளைக்கிழங்கு, பச்சை நிறம் கொண்ட உருளைக்கிழங்கு ஆகியவற்றை டோஸ் செய்து பயன்படுத்துவது நல்லது என்று தேசிய கேபிடல் பாய்சன் சென்டர் பரிந்துரைக்கிறது.

​முளைவிடாமல் எப்படி தடுக்கலாம்?

உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி சேமித்து வைப்பதை ,விட,தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்துவது நல்லது.

சேதமடைந்த உருளைக்கிழங்கை அவ்வப்போது அகற்றி விடுவது நல்லது. மற்ற உருளைக்கிழங்கு முற்றிலும் வறண்டு ,

நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து, குளிச்சியான , இருட்டான இடத்தில் சேமித்து வைக்கவும் . இப்படி செய்வதால் முளைவிடுவது குறைக்கப்படும்.

உருளைக்கிழங்குடன் வெங்காயத்தை சேர்த்து சேமித்து வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைப்பதால் முளைவிடுதல் ஊக்குவிக்கப்படும். ஆனால் இந்த பழக்கத்திற்கு அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை.

​என்ன பிரச்சினை ஏற்படும்?

முளைவிட்ட உருளைக்கிழங்கில் க்ளைக்கோஆல்கலாய்டு அளவு அதிகம் இருப்பதால் மனிதர்கள் இதனை உட்கொள்வதால் நச்சுத்தன்மை அதிகரிக்கும்.

முளைவிட்ட உருளைக்கிழங்கை உட்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகிறது.

இதய பாதிப்புகள் முதல் வயிற்று கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

மிக தீவிர நிலையில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளன. பிறப்பு குறைபாட்டிற்கான அபாயமும் அதிகரிக்கின்றன.

உருளைகிழங்கை தோல் உரித்து பயன்படுத்துவதால், பொரிப்பதால் அல்லது முளையை அகற்றுவதால் அதன் க்ளைக்கோஆல்கலாய்டு அளவு குறைந்தாலும்,

அதன் நச்சுத்தன்மை குறைவதாக போதுமான சான்றுகள் இல்லை. ஒட்டுமொத்தமாக, முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடாமல் இருப்பது பாதுகாப்பான வழிமுறையாகும்.