இரவு பணிக்கு கிளம்பிய இராணுவ வீரர்! மனைவியின் செயலால் நடந்த விபரீதம்… பக்கத்து வீட்டு பெண் கண்ட அதிர்ச்சி காட்சி!!

983

இந்தியாவில் இரவு பணிக்கு கிளம்பிய இராணுவ வீரர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் மன்ஹர். இவர் இராணுவ வீரர் ஆவார். முகேஷின் மனைவி பபிதா. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

உள்ளூரிலேயே பணியில் இருந்த முகேஷ் தனது குடும்பத்தாருக்கு அடிக்கடி பண உதவி செய்து வந்தார்.

இதை அவர் மனைவி பபிதா எதிர்த்து வந்ததோடு, முகேஷ் அவர் குடும்பத்தாருடன் அதிகம் நெருக்கம் காட்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.


இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு பணிக்கு செல்ல முகேஷ் தயாரான நிலையில் அவரின் சகோதரர் போன் செய்து குடும்ப உறுப்பினர் ஒருவரின் திருமணம் நடக்கவுள்ளது குறித்து பேசினார்.

பின்னர் முகேஷ் தனது மனைவி பபிதாவிடம் அந்த திருமணத்துக்கு செல்வது குறித்து பேசினார்.

இதனால் கோபமடைந்த பபிதா நாம் திருமணத்துக்கு செல்லக்கூடாது என கணவரிடம் சண்டையிட்டார். இவர்களின் குரல் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த பெண் அங்கு ஓடி வந்தார்.

அந்த சமயத்தில் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த முகேஷ் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையெல்லாம் பார்த்த பக்கத்து வீட்டு பெண் அதிர்ச்சியடைந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றினார்கள்.

இரவு 10 மணியளவில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.