தாய்லாந்து………..
தாய்லாந்தை சேர்ந்த 67 வயதான முதியவருக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் ஆகியும் வலி குறையாததால் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவரை சந்தித்த பின் அவரது பிரச்சனைகளை மருத்துவரிடம் விளக்கியுள்ளார்.
இதனையடுத்து, அவரிடமிருந்து மல மாதிரி வாங்கப்பட்டு அதை ஒட்டுண்ணி நோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சோதனை செய்ததில், அவர் நாடாப்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் அவர் கொடுத்த மல மாதிரியில் 28 முட்டைகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவருக்கு நீரிழிவு மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவர் மருந்தை எடுத்து கொண்ட ஒரே நாளிலே அந்த புழு அவருடைய மலக்குடலில் இருந்து துண்டுகளாக வெளியேறியது.
பின்னர், வெளியான புழுவின் முழு நீளத்தை கண்டு மருத்துவர்கள் திகைத்தனர். அந்த புழு 18 மீட்டர் நீளமுள்ள டேனியா சாகினாட்டா போவின் என்ற நாடாப்புழுவின் இனத்தை சேர்ந்தது என்று ஒட்டுண்ணி நோய் ஆராய்ச்சி மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமை மருத்துவர் கூறுகையில், புழு முட்டை இருந்த மாட்டிறைச்சியை சாப்பிட்டதால் இது பரவியுள்ளது எனவும் இதுபோன்ற புழுக்கள் மனிதர்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழக்கூடியது என்றும் தெரிவித்தார். பின்னர், அவருடைய குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.