இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த கள்ளக்காதலன்!!

174

தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரோஜா. இவருக்கு வயது 32. இவருடைய கணவர் ராஜா.

இந்நிலையில் ரோஜா திடீரென கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரோஜா எப்போதும் போல 100 நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார்.
அப்போது ஆரோக்கியதாஸ் ரோஜாவை கழுத்தறுத்து கொலை செய்ததாகத் தெரிகிறது.

அதன் பிறகு ரோஜாவின் உடலை தரதரவென இழுத்து வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை ஆரோக்கியதாசை கைது செய்து விசாரித்தனர்.

அதில் கள்ள காதல் விவகாரத்தால் ரோஜா படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை கண்டு அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர். போலீசார் ரோஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.